News March 18, 2024
பாஜகவுக்கு என்ன லாபம்?

நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி சேர்வதாக பாமக அறிவித்துள்ளது. இதனால், பாஜகவுக்கு அதிகப்படியான பலன்கள் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவுடனான கூட்டணியை முறித்திருப்பதால், தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது பாஜக. பாமகவின் வாக்கு சதவீதம் இணையும் போது பாஜகவுக்கு அது மிக சாதகமான முடிவுகளை கொடுக்கும்.
Similar News
News November 24, 2025
ஏற்றம் கண்டு சரிவில் முடிந்த சந்தைகள்!

வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் மாலையில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 331 புள்ளிகள் சரிந்து 84,900 புள்ளிகளிலும், நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 25,959 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. Reliance, ICICI Bank, TCS உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
News November 24, 2025
மழை வரப்போகுதா? இதை வைத்து கண்டுபிடிக்கலாம்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது மழைக்கான அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் காற்று மேகக் கூட்டத்தை கலைத்துவிடும். ஆனால், மழை வருவதை எளிதாக தெரிந்துகொள்ள சில உயிரினங்கள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. அதன்படி, மழை வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.


