News April 25, 2025
தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.
Similar News
News April 25, 2025
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்கன்(84), இன்று காலமானார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார். விண்வெளித் துறையில் நாடு பெரிய சாதனைகள் புரிய இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்பி, திட்ட கமிஷன் உறுப்பினர், தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
News April 25, 2025
யார் இந்த கஸ்தூரி ரங்கன்?

இன்று காலமான இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் சிறப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்: *பாஸ்கரா, இன்சாட் செயற்கைக் கோள்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார் *காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வில் நிபுணர் *பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றவர் *ஜவஹர்லால் பல்கலை., வேந்தர், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவர் பதவிகள் வகித்தவர் *புதிய கல்விக்கொள்கை குழுத் தலைவராக இருந்தவர்.
News April 25, 2025
இபிஎஸ்-ஐ தேடிவந்த செங்கோட்டையன்

இபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க செங்கோட்டையன் வருகை தந்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் முகமலர்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர். அவரும் பதிலுக்கு சிரித்த முகத்துடன் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைத்து உள்ளே சென்றார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக ஒதுங்கியே இருந்த அவர், மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்து இணக்கமாக செயல்பட முடிவு எடுத்துள்ளார்.