News September 8, 2025
DGP நியமன நடைமுறை என்ன?

தற்போதைய DGP பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன், DGP அந்தஸ்துக்கு தகுதியான காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு UPSC-க்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் தகுதி, அவர்களின் சேவை உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுக்கு UPSC பரிந்துரைக்கும். பின்னர் மாநில முதல்வரின் தலைமையிலான குழு பரிந்துரையை ஆய்வு செய்து இறுதியாக DGP-ஐ நியமனம் செய்யும்.
Similar News
News September 8, 2025
தவெக இல்லை திமுக.. ட்ரோல் ஆகும் PHOTO

நகை திருட்டில் ஈடுபட்ட தவெக ஒன்றிய இணை செயலாளர் அர்சிதா கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இதை திமுக உள்ளிட்ட கட்சியினர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், நகைகளைத் திருடி கைதான பெண்ணுக்கும், தவெகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் திமுகவை சேர்ந்தவர் என்று PHOTO ஆதாரத்துடன் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. இதனையடுத்து, தவெகவினர் இந்த PHOTO-ஐ வெளியிட்டு திமுகவினரை ட்ரோல் செய்கின்றனர்.
News September 8, 2025
Beauty Tips: வெளியே போகும் முன் இத பண்ணிட்டு போங்க

முக்கியமான நிகழ்ச்சிகளில் கூடுதலாக அழகாக தெரியவேண்டும் என்பதற்காக சிலர் காசு கொடுத்து Facial செய்துகொள்வர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இந்த Facepack-ஐ தயாரித்து முகத்தில் தடவினால் போதும். ➤முதலில் உருளைக்கிழங்கை எடுத்து Grate செய்துகொள்ளுங்கள் ➤அதில் தயிரையும், மஞ்சளையும் சேர்த்து முகத்தில் தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் Facial செய்ததுபோன்ற பொலிவு கிடைக்கும். SHARE.
News September 8, 2025
EXCLUSIVE: பாஜகவில் இருந்து விலகல்.. அடுத்த திட்டம் என்ன?

25 ஆண்டு கால பாஜகவுடனான பயணத்தில் இருந்து <<17645797>>Ex MLA சாமிநாதன்<<>> திடீரென விலகியது, புதுவை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து Way2News அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஊழல் இல்லாத புதிய ஆட்சியை அமைக்க தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார். TVK-வில் சேர உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, இப்போதைக்கு இல்லை எனவும் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அதிரடி காட்டியுள்ளார்.