News July 7, 2025
Golden Memories ஹீரோ பேனாவின் இன்றைய விலை என்ன?

‘அவன் பணக்காரன்டா’ என்றதும், ‘எப்படி சொல்ற’ என மற்றொருவன் கேட்க, ‘ஹீரோ பேனாலாம் வச்சிருக்கான் பாரு’ என்ற இந்த உரையாடலை நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்திருப்போம். அதிலும் ஹீரோ பேனாவின் தங்கம் போன்ற நிறத்திலான மூடி வெளியில் தெரியும்படி சட்டையில் வைத்திருப்பதே தனி கெத்து. இந்த பேனாவின் விலை தற்போது ஆன்லைனில் ₹200 – ₹600 வரையாக உள்ளது. நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு இந்த பேனாவை வாங்கினீர்கள்?
Similar News
News July 7, 2025
PLEASE இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்: சோர்வு -திடீரென அதிக களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வது *காரணமின்றி தலைச்சுற்றல் & மயக்கம் *தூங்குவதில் சிரமம் -படுக்கையில் நேராகப் படுத்திருக்கும்போது தூங்குவதற்கு கடினமாக உணர்வது *கால் வீக்கம் *உடல் எடை வேகமாக அதிகரித்தல் *தொடர் சளி & இருமல். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
News July 7, 2025
குஜராத்தில் பிரம்மாண்ட விண்வெளி மையம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ₹10,000 கோடி செலவில் குஜராத்தில் பெரிய விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது. குஜராத் மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், ராக்கெட் ஏவுதலின் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-5, ககன்யான், சுக்கிரன் திட்டம் போன்றவற்றுக்கு இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்.
News July 7, 2025
பாஜகவினரை வைத்துக் கொண்டே EPS செய்த சம்பவம்!

2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். பாஜகவினர் கூட்டணி ஆட்சி என பேசி வரும் நிலையில், இபிஎஸ் பாஜகவினரை வைத்துக் கொண்டே அதிமுக ஆட்சி என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனும் கூட்டணி ஆட்சியே அமையும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணி ஆட்சி அமையுமா?