News March 28, 2024
அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக நிபந்தனை என்ன?

*சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும் * மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். *மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 6% வாக்குகளுடன், ஒரு மக்களவைத் தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும்.*எந்த தொகுதியில் வெல்லாவிடினும் 8 % வாக்குகளைப் பெற வேண்டும்.
Similar News
News January 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 571
▶குறள்:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
▶பொருள்: இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
News January 5, 2026
இந்தியா டி20-யின் சொத்து இவர்தான்: டிவில்லியர்ஸ்

வரும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய வீரராக திகழ்வார் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியும் என்பதே அவரின் பலம் என்றும், ஹர்திக் அணியில் இருந்து கேப்டன் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரம் என்றும் கூறியுள்ளார். அவர் 5 ஓவர்கள் பேட்டிங் செய்தால் எதிரணி நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் ஏபிடி குறிப்பிட்டுள்ளார்.
News January 5, 2026
கெத்து காட்டியது ஜனநாயகனா? பராசக்தியா??

பொங்கலுக்கு ஜனநாயகனும், பராசக்தியும் ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது. ஒரே நேரத்தில் 2 பெரிய படங்கள் வருவதால் எது வெற்றிப்படமாக மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனிடையே கமர்சியல் கலந்த அரசியலுடன் ‘ஜனநாயகன்’ டிரெய்லரும், ஹிந்தி எதிர்ப்பு அரசியலுடன் ‘பராசக்தி’ டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது. இதில் எந்த படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்தது?


