News September 27, 2025
உயிரிழப்புக்கு என்ன காரணம்?

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தை விட விஜய் 5, 6 மணிநேரம் தாமதமாக வந்தது, குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கில் கட்டுப்பாடில்லாமல் மக்கள் திரண்டது, எச்சரிக்கையை மீறி குழந்தைகளை அழைத்து வந்தது – இவற்றை தவிர்த்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
Similar News
News January 2, 2026
BREAKING: அதிகாலையில் மீனவர்கள் அதிரடி கைது

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
News January 2, 2026
இந்திய அணியில் என்ன மாற்றம் செய்யலாம்?

வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட T20I WC-க்கான அணியில் மாற்றங்கள் செய்யலாம் என ICC தெரிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வலுவாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தாலும், இவருக்கு பதில் இவரை கொண்டுவரலாமே என்ற சில விமர்சனங்களும் உள்ளது. இந்திய அணியில் ஏதாவது மாற்றம் செய்யலாமா அல்லது இந்த அணியே பந்தயம் அடிக்கும் என நினைக்கிறீங்களா?
News January 2, 2026
அரசு ஊழியர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

<<18733786>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்புகள் ஜன.6 முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆய்வறிக்கை பரிசீலனைக்கு பின் ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கூட்டமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


