News October 1, 2025
ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நேரம்?

இன்று ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வர வேண்டும் என்பதற்காகவும், தொழில் சிறக்க வேண்டும் என்பதற்காக சரஸ்வதி தேவியை வழிபடுவோம். புத்தகங்களுக்கும், தொழிலுக்கு உதவும் பொருள்களுக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட வேண்டும். காலை 9 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் வழிபடுவது செய்வது நல்லது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News March 30, 2026
மார்ச் 30 : வரலாற்றில் இன்று

*சர்வதேச இட்லி தினம் *1709 – தமிழில் நாள்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்தநாள் *1908 – இந்திய திரையுலகின் முதல் நடிகை தேவிகா ராணி பிறந்தநாள் *1925 – மார்க்சிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் பிறந்தநாள் *1936 – ஈழத்து வில்லிசை கலைஞர் சின்னமணி பிறந்தநாள் *1951 – ஈழத்து பத்திரிகையாளர் நா.பொன்னையா நினைவு நாள் *1966 – இயக்குநர் விக்ரமன் பிறந்தநாள்
News March 30, 2026
திருப்பரங்குன்றத்தில் களமிறங்கும் வேட்பாளர்கள்

சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் ஊற்று நோக்கப்படும் தொகுதிகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. ஏனெனில், திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் அங்கு அதிமுக – ராஜன் செல்லப்பா, திமுக: கிருத்திகா தங்கபாண்டி, தவெக: CTR நிர்மல் குமார், நாம் தமிழர்: சத்தியா தேவி களம் காணுகின்றனர். இதில் ராஜன் செல்லப்பா சிட்டிங் MLA ஆக உள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
ரயில்களில் சர்ச்சை விளம்பரங்களுக்கு தடை

புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரங்களை ரயில்களில் ஒட்டுவதற்கு ரயில்வே தடை விதித்துள்ளது. இனி ரயில் நிலையங்கள், ரயில்களில் விளம்பரங்கள் ஒட்டுவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, ரயில் விபத்துகளுக்கு காப்பீட்டு திட்டங்களை வழங்கும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் ஏற்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.


