News December 28, 2024
மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.
Similar News
News September 12, 2025
அற்புதம்.. 6.2 கிலோவில் பிறந்த ‘பீம் பாய்’

பிறந்த குழந்தைகளின் எடை, வழக்கமாக 2.5- 3.2 கிலோ வரை இருக்கும். ஆனால், கடந்த வாரம் ம.பி.யில் பெண்ணுக்கு <<17618155>>5.2 கிலோ எடையில்<<>> ‘பீம் பாய்’ குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது, அதனை மிஞ்சும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. புளோரிடாவில் டேனியல்லா ஹைன்ஸ் என்பவர் 6.2 கிலோ எடையுள்ள குழந்தையை ஈன்றுள்ளார். போட்டோஸ் SM-ல் பரவியதால், ஓவர் நைட்டில் அந்த குழந்தை பிரபலமாகியுள்ளது.
News September 12, 2025
ரேஷன் கார்டு அப்டேட்.. உடனே இதை பண்ணுங்க

சென்னை, திருப்பத்தூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நாளை முதல் தொடங்குகின்றன. அதில், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணப்படும். மேலும், ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் செப்.25-க்குள் பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க மக்களே! SHARE IT.
News September 12, 2025
தேர்தல் செலவில் டாப் 2-வில் திமுக

2024 தேர்தல் செலவு குறித்த அறிக்கையை ADR வெளியிட்டுள்ளது. DMK ₹170 கோடியும், ADMK ₹5.7 கோடியும் செலவிட்டுள்ளது. நாட்டிலேயே அதிகம் செலவிட்ட 2-வது மாநில கட்சி DMK ஆகும். முதலிடத்தில் சந்திரசேகர் ராவின் BRS (₹197 கோடி) கட்சி உள்ளது. அதேநேரம், இந்த செலவுகளில் முதற்கட்ட தலைவர்களின் சுற்றுப்பயணம், போஸ்டர்ஸ், நட்சத்திர பேச்சாளர்கள், வாகனங்கள், உணவு போன்றவையும் அடங்கும்.