News March 30, 2025
செங்கோட்டையனின் டெல்லி ரகசிய பயணம் பின்னணி?

கொங்கு பகுதியில் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கும் இபிஎஸ் – செங்கோட்டையனுக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக உள்ளூர் அளவில் நடந்த மோதல், தற்போது டெல்லி வரை சென்று இருக்கிறது. இபிஎஸ்-யிடம் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை, தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செங்கோட்டையன் டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 25, 2026
திமுகவில் இணைய டிமாண்ட் வைத்தாரா OPS?

நேற்று <<18942850>>OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு <<>>சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திமுகவில் இணைவதற்கு சில கோரிக்கைகளை OPS வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன், MLA அய்யப்பனுக்கு தேர்தலில் போட்டியிட 2 சீட்டும், மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட்டும் தருமாறு கோரினாராம். OPS இணைந்தால் தென்மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என கருதி திமுகவும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாம்.
News January 25, 2026
பிரபல நடிகை காலமானார்.. அதிர வைக்கும் காரணம்

‘Jesus Heaven’, ‘Camels Do Not Cry Separately’ போன்ற படங்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல கொரிய நடிகை நாம் ஜியோங் ஹீ (84) காலமானார். இந்நிலையில், அவரது இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பிறகு அவரது உடல் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.
News January 25, 2026
இன்று கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா விஜய்?

விஜய் பங்கேற்கும் தவெக செயல்வீரர்கள் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜன நாயகன் பிரச்னை, கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை என எது குறித்தும் அவர் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள தவெக கூட்டத்தில், விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கும் தொண்டர்கள், கூட்டணியா (அ) தனித்து போட்டியா என்பதையும் அறிவிப்பார் என கூறுகின்றனர்.


