News October 13, 2025

2026 தேர்தல் பிரசார களம் எதை நோக்கி செல்கிறது?

image

சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பே தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று முதல் பாஜகவும் பிரசாரத்தை துவங்கியுள்ளது. ஆளும் திமுக அரசும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் மூலம் நேரடியாக மக்களை சந்திக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசார வாகனங்கள், அவர்களின் முழக்கங்களை மேலே swipe செய்து பாருங்கள். எந்த கட்சியின் பிரசாரம் உங்களை ஈர்க்கிறது என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News October 13, 2025

மழை பெய்யுமா? பின்கோடு தெரிந்தால் போதும்

image

பின்கோடை உள்ளிட்டால் வானிலை நிலவரத்தை அறிய மத்திய அரசின் ‘<>Mausamgram<<>>’ என்ற இணையதளம் உதவுகிறது. இது ‘Mausam’ என்ற ஆப் வடிவிலும் உள்ளது. இதில் மாநிலம், மாவட்டம், வட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும் வானிலை முன்னறிவுப்புகளை அறியலாம். இந்த அறிவிப்புகள் தமிழ் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 13, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் ₹5,000 விலை உயர்ந்தது

image

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. இன்று(அக்.13) ஒரே நாளில் கிராமுக்கு ₹5 உயர்ந்ததால் ₹195-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 அதிகரித்து ₹1,95,000-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் பலரும் முதலீடு, ஆபரணங்கள் வாங்கத் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் முன்பதிவு செய்த 10 நாள்களுக்கு பிறகே வெள்ளி கிடைக்கும் என வியாபாரிகள் நேற்று அறிவித்திருந்தனர்.

News October 13, 2025

16-ம் நாள் முடிந்தது.. என்ன செய்ய போகிறார் விஜய்?

image

கரூர் துயரம் (செப்.27) நடந்து 3 நாள்களுக்கு பிறகு (செப்.30) சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டார் விஜய். ஆனால், அதன் பிறகு அவர் வெளியே தலைகாட்டாதது பேசுபொருளானது. இதனிடையே, அக்.17-ல் கரூருக்கு நேரில் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா கூறிய 16 நாள் துக்கமும் (அக்.12) முடிவடைந்துள்ளது. <<17990015>>SC<<>>-ன் தீர்ப்பும் இன்று வெளியாகும் நிலையில், விஜய் என்ன செய்ய போகிறார்?

error: Content is protected !!