News June 28, 2024
விதி எண் 110 என்றால் என்ன?

விதி எண் 110 என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 208ஆவது பிரிவின் 1ஆவது உட்பிரிவின்படி, இயற்றப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்றாகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளைப் பற்றி அவசர அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதனை அவை விதி எண் 110இன் கீழ் அறிவிக்கலாம். இந்த அறிவிப்பின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால், அது குறித்து எந்த விதமான விவாதமும் நடத்தப்பட மாட்டாது.
Similar News
News November 5, 2025
ஆண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

ஆண்களிடம் எப்போதும் கேட்கக் கூடாத கேள்விகள்: *இத்தன வருசமா வெளியூர்ல இருந்தும், இவ்வளவு தான் சம்பாதிச்சியா? *திருமணத்தை தள்ளி வைக்கும் ஆணிடம், ‘முடி கொட்டிருச்சு. இன்னும் கல்யாணம் ஆகலையா?’ *வேலைத் தேடும் ஆணிடம், ‘நீ எப்போ வேலைக்கு போவ?’ *இன்னும் சொந்த வீடு வாங்கலையா? *கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லையா? வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
News November 5, 2025
ராணுவத்தில் இடஒதுக்கீட்டை கொண்டு வரலாமா?

நாட்டில் <<18200083>>10% உள்ள உயர்சாதியினர்<<>> ராணுவம், அரசு துறைகளில் கோலோச்சுவதாக ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்திற்கு எந்த ஒரு மதமோ, சாதியோ கிடையாது, அதை அரசியலாக்கி இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல் நாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
இந்த Safety Pin-ன் விலை ஜஸ்ட் ₹69,000 தான்!

டிரெஸ் கிழிந்தால், சட்டையில் பட்டன் இல்லை என்றால் நாம் Safety Pin-ஐ யூஸ் பண்ணுவோம். அதிகபட்சமாக ₹10-க்கு 10 Safety Pin-கள் வாங்கி இருப்போம். ஆனால், PRADA என்ற இத்தாலி பேஷன் பிராண்ட், சமீபத்தில் சிறப்பு உலோகம் மற்றும் சில கைவினை வேலைப்பாடுகளோடு கூடிய Safety Pin-களை அறிமுகப்படுத்தியது. அதன் விலையை கேட்டு சமூக வலைதளமே ஆடிப்போய் உள்ளது. ஆமாம்,
ஒரு Safety Pin-ன் விலை ஜஸ்ட் ₹68,758 தானாம்.


