News January 26, 2025
குடியரசு தினம் என்றால் என்ன?

நாட்டின் சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்னும் பலர் இருக்கின்றனர். 1947ஆம் ஆண்டு நமது நாட்டை விட்டு வெள்ளையர்கள் வெளியேறிய ஆகஸ்ட் 15ஆம் நாளை நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். அதன்பின், அறிஞர் பெருமக்கள் இணைந்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கினர். அது அமல்படுத்தப்பட்ட ஜனவரி 26, 1950 நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
Similar News
News August 28, 2025
ராசி பலன்கள் (28.08.2025)

➤ மேஷம் – பாராட்டு ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – அமைதி ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பயம் ➤ கன்னி – கவலை ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தாமதம் ➤ தனுசு – ஜெயம் ➤ மகரம் – ஆதரவு ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – ஆக்கம்.
News August 28, 2025
ஐபோன் 17 சீரீஸ்: அப்டேட் வெளியானது

கலிஃபோர்னியாவில் வரும் செப்., 9-ம் தேதி ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என 4 மாடல்கள் அறிமுகமாக உள்ளன. இந்தியாவில் செப்., 19 முதல் விற்பனை துவங்க உள்ளன. அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக இப்போன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ₹89,000 முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
News August 28, 2025
ராகுல் ஜனநாயகத்தின் காவலன்: செல்வப்பெருந்தகை

குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு என ராகுல் கூறியது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாஜக அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்வதாகவும் கூறியுள்ளார். இது மாற்றத்தின் குரல் என்றும், ராகுல் ஜனநாயகத்தின் காவலன் என்று நிரூபித்திருப்பதாகவும் கூறினார்.