News November 30, 2024
PINK பந்து டெஸ்ட் என்றால் என்ன?

இந்தியா, ஆஸி இடையேயான 2ஆவது டெஸ்ட், PINK பந்துப் போட்டி எனப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் நடத்தப்படாமல் இரவு-பகலில் நடத்தப்படும் போட்டிக்கு சிவப்பு நிற பந்துக்கு பதிலாக PINK நிற பந்து பயன்படுத்தப்படும். இரவு நேரத்தில் சிவப்பு நிற பந்தை காட்டிலும் PINK நிற பந்து மிகத் தெளிவாக தெரியும். ஆதலால் PINK நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே இது PINK பந்துப் போட்டி எனப்படுகிறது.
Similar News
News April 26, 2025
மிகப்பெரிய என்கவுன்டர்.. 37 பேர் பலி?

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கர்ரேகுட்டாவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 37 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 26, 2025
கோடீஸ்வர யோகம்: பணம் கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் மே 31 முதல் ஜூன் 29 வரை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *சிம்மம்- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கோடீஸ்வர யோகம், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி *துலாம்: அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு, தொழில் முயற்சி கைகூடும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் *மேஷம்: பண யோகம் வரும், கோடீஸ்வர அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
News April 26, 2025
ஆனந்த் அம்பானிக்கு புதிய பொறுப்பு

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலோடு, அவர் முழுநேர இயக்குநராக பணிபுரிவார் என்று ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இவர் 2023-ஆம் ஆண்டு Non-Executive இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனந்த் அம்பானி அமெரிக்காவின் பிரவுன்ஸ் பல்கலையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.