News August 16, 2024
ஆரஞ்சு, சிவப்பு அலர்ட் என்றால் என்ன?

மழை குறித்து IMD விடுக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் எச்சரிக்கை எனில் கனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 6.4 செ.மீ.- 11.5 செ.மீ. வரை மழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக கனமழை பெய்யும். 11.5 செ.மீ.-20.4 செ.மீ. வரை மழை பெய்யும். சிவப்பு எச்சரிக்கை எனில், அதிகனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 20.4. செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்.
Similar News
News November 24, 2025
ஜனநாயகன் ஆடியோ விழாவுக்கு டூரிஸ்ட் பேக்கேஜா?

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் களைகட்டவுள்ளதை, கோலிவுட் வட்டார தகவல்களில் அறிய முடிகிறது. இந்த விழாவில் சைந்தவி, திப்பு, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யின் <<18363961>>35 பாடல்களை<<>> பாடவுள்ளனராம். விஜய்யின் கடைசி பட ஆடியோ லாஞ்ச் என்பதால், ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் சில டூரிஸ்ட் நிறுவனங்கள் மலேசியா – ஜனநாயகன் விழா பேக்கேஜ்களை அறிவிக்கவுள்ளதாம்.
News November 24, 2025
நவம்பர் 24: வரலாற்றில் இன்று

*1859 – சார்லஸ் டார்வின் ‘The origin of Species’ என்ற நூலை வெளியிட்டார்.
*1914 – இத்தாலிய சோசலிச கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார்.
*1968 – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பிறந்தநாள்.
*1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படை தளத்தின் கிழக்கு பகுதி இராணுவ வேலி, விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
News November 24, 2025
தலாய் லாமா 130 வயது வரை வாழ்வார்: திபெத்திய அமைப்பு

தலாய் லாமா உடல் நலத்துடன் உள்ளதாக மத்திய திபெத்திய நிர்வாக மூத்த தலைவர் பென்பா செரிங் கூறியுள்ளார். தற்போதைய தலாய் லாமா இறப்பை சீனா விரும்புவதாக கூறிய அவர், தலாய் லாமா இன்னும் 20 ஆண்டுகள் கூட வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஜூலையில் 90 வயதை அடைந்த தலாய், அடுத்த பெளத்த மதகுருவை (தலாய் லாமா) தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தார். இதில் அரசும் தலையிடும் என சீனா அறிவித்தது.


