News February 26, 2025
மோர்ஸ் கோட் என்றால் என்ன?

IPL தொடருக்காக சென்னை வந்திருக்கும் <<15588615>>தோனியின் டி-சர்ட்டில் உள்ள மோர்ஸ் கோட்<<>> பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால் என்ன? தொலைதூரத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கான எளிமையான முறைதான் Morse Code. இதனை 1830ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். A முதல் Z வரை உள்ள எழுத்துகளுக்கு ‘.’ & ‘_’ மூலம் அடையாளம் கொடுக்கப்பட்டு, அவை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றப்படும்.
Similar News
News February 27, 2025
தமன்னாவுடன் காதலா? கார்த்தி விளக்கம்

பையா, சிறுத்தை படங்களில் கார்த்தியுடன் தமன்னா இணைந்து நடித்திருந்தார். இதனால் 2 பேரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து, அண்மையில் கார்த்தி அளித்த பேட்டியில், அது வதந்தி என்றும், ஆனால் அந்த வதந்திகளை தாம் ரசித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் வதந்திகளை நம்பி, தனது மனைவி தன்னிடம் ஹீரோயின்களை தொடாமல் நடிக்க முடியாதா என கேள்வி கேட்டதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
News February 27, 2025
காயத்திலிருந்து மீண்டு சாதனை படைத்த நாயகன்

சாம்பியன் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஜாத்ரான் 177 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஆனால் கடந்த 6 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்து, காயத்திலிருந்து மீண்டு வந்து இன்று விளையாடினார். மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளார். உண்மையில் இவர் ஹீரோதானே?
News February 27, 2025
ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி

ICC Champions Trophy: ENG-க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த AFG 325 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ENG 49.5 ஓவரில் 317 ரன்கள் ஆல் அவுட் ஆனது. ஆப்கன் அணியில் அசத்தலாக பேட்டிங் செய்து இப்ராஹிம் சத்ரான் 177 ரன்கள் குவிக்க, அபாரமாக பந்து வீசிய Azmatullah Omarzai 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.