News April 28, 2025
என்னது ‘கனிமா’ இந்த பாட்டோட காப்பியா!

‘மன்மதன்’ படத்தில் வரும் ‘என் ஆசை மைதிலியே’ பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ‘கனிமா’ பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இசைக்கோர்வை, சவுண்ட் மிக்சிங், பாடலின் எமோஷ்னல் டோன் என அனைத்தும் அந்த பாடலை மனதில் வைத்து உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், ‘கனிமா’ பாடல் உருவான விதம், BTS காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
அருந்ததியாக மாறும் ஸ்ரீலீலா!

நடிகை அனுஷ்காவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் ‘அருந்ததி’. 2009-ல் வெளியான இந்த படம் தென்னிந்திய மொழிகளில் சக்கைப்போடு போட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து, இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. ரீமேக் படங்களின் கிங்கான மோகன் ராஜா இயக்கத்தில் இந்த படத்தில் ஸ்ரீலீலா அருந்ததியாக நடிக்கவுள்ளாராம். மிரட்டுவாரா ஸ்ரீலீலா?
News October 29, 2025
கூட்டணி நிலைப்பாடு: தவெக திட்டவட்டம்

தவெக-அதிமுக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக EPS சொன்னது பற்றி தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கூட்டணி தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில்தான் தற்போதும் இருக்கிறோம் என் கூறியிருக்கிறார். இதன்மூலம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தவெக தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
News October 29, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

22 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹3,000 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று ₹2,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் ₹1,080 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹920 அதிகரித்துள்ளது. தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,325-க்கும், 1 சவரன் ₹90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


