News March 4, 2025

என்னது.. நம்ம ஊர்ல தங்கமா..!

image

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே, அதிக அளவில் தங்கம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழத்திலும் தங்கம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க சாத்தியக் கூறு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, நம்ம ஊரிலேயே தங்கம் கிடைத்தாலாவது விலை குறையுமா?

Similar News

News March 4, 2025

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மதுபானம் தரும் நிறுவனம்

image

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம், ஜாக் டானியல்ஸ். இது மாதா மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு Daniel’s Old No. 7 விஸ்கி பாட்டிலையும் ப்ரீயாக தருகிறது. டென்னஸி மாகாணத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ள மூர் கவுன்ட்டியில், மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆகவே, ஊழியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவ கொண்டுவந்த இப்பழக்கம், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.

News March 4, 2025

221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

image

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?

News March 4, 2025

145 மருந்து, மாத்திரைகள் போலி: மத்திய அரசு

image

சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று போன்ற பிரச்னைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்து, மாத்திரைகள் தரமற்றது என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 1,000க்கும் அதிகமான மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இமாச்சல், உத்தராகண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மாத்திரைகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த போலி மருந்துகளை <>இந்த<<>> இணையதளத்தில் அறியலாம்.

error: Content is protected !!