News February 16, 2025

ரயில்வே நெட்வொர்க்கில் இந்தியாவுக்கு எந்த இடம்?

image

உலகிலேயே அதிக தூரத்திற்கு ரயில் சேவை இயக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்கா தான். சுமார் 3 லட்சம் கிமீ தொலைவுக்கு அங்கு இருப்புப் பாதை பரந்து விரிந்திருக்கிறது. 2வது இடத்தில் உள்ள சீனாவில் 1.5 லட்சம் கிமீ தொலைவுக்கு இருப்புப் பாதை உள்ளது. 85 ஆயிரம் கிமீ தொலைவுடன் ரஷ்யா 3வது இடத்தை பிடித்திருக்கிறது. 4ம் இடம் இந்தியாவுக்கு தான். மொத்தம் 65,554 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

தெருநாய்கள் வழக்கு: அரசுக்கு கெடுபிடி! 1/2

image

*உள்ளாட்சி அமைப்புகள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும் *பிடித்த தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது *சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உத்தரவு *அனைத்து மாநில அரசுகளும் இதை உறுதியாக கடைபிடித்து, 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

News November 7, 2025

தெருநாய்கள் வழக்கு: SC-ன் உத்தரவுகள் இதோ! 2/2

image

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.

News November 7, 2025

பாஜக அழைப்பு விடுத்தது: செங்கோட்டையன் பரபரப்பு

image

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!