News December 15, 2024

விசிகவில் என்ன நடக்கிறது?

image

மன்னராட்சி நடப்பதாக சொன்ன ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுகவில் இருந்து எழுந்த எதிர்ப்பைவிட, விசிகவில் இருந்து எழுந்த எதிர்ப்பு கடுமையாக இருந்தது. கூட்டணியில் இருப்பதால், இதை ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், கொள்கை அளவில்கூட அதை பற்றி பேசுவதை விசிக தவிர்ப்பது ஏன் எனவும், விசிக மூத்த தலைவர்கள், தங்கள் கட்சியைவிட திமுகவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்கின்றனர்.

Similar News

News March 5, 2026

சாமிக்கு ஓட்டு இல்லாததால் இப்படியா? கண்டித்த HC

image

கரூரில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், சாமிகள் ஏழை என்பதாலும், வாக்குரிமை இல்லை என்பதாலும் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையா என மதுரை HC கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்பு செய்த வசதியானவர்களுக்கு வாக்குரிமை உள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்றும் கேட்டுள்ளது.

News March 5, 2026

சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

image

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?

News March 5, 2026

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!