News April 15, 2024
என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் இபிஎஸ் வசமே, அக்கட்சி அலுவலகங்கள் உள்ளன. அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பதற்கு இபிஎஸ் என்ன பதிலடி கொடுப்பார்? என அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
BREAKING: சிஎஸ்கே அணியில் புதிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சன் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாள்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இந்த சஸ்பென்ஸுக்கு தற்போது கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலளித்துள்ளது. X தளத்தில், ‘Time ആയി’ (‘time has come’) என பதிவிட்டு சாம்சன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. CSK-வில் சஞ்சு ஜொலிப்பாரா?
News November 15, 2025
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு உங்கள் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஜன.15 – பொங்கல் பண்டிகை தினத்தில் ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு நாளை (நவ.16) தொடங்குகிறது. போகி பண்டிகை தினமான ஜன.14 அன்று ஊருக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கிய நிலையில், 8:02-க்கே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன.


