News May 16, 2024

இந்த முறை என்ன சொல்லப் போகிறார் தோனி?

image

2020 முதல் தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. 2020 – “கண்டிப்பாக இல்லை”, 2021 – “என்னால் விட்டுவிட்டு போக முடியாது”, 2022 – “கடைசிப் போட்டியை சென்னையில் விளையாடாமல் போனால் நன்றாக இருக்காது”, 2023 – “நான் எனது ரசிகர்களுக்கு பரிசாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு என்ன சொல்வார் தோனி என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Similar News

News December 19, 2025

இதை செய்பவர்களுக்கு ₹25,000 சன்மானம்: நிதின் கட்கரி

image

சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை ஹாஸ்பிடலில் சேர்ப்பவர்கள் ‘RAAHVEER’ (சாலையின் நாயகன்) என கவுரவிக்கப்பட்டு, ₹25,000 சன்மானம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். விபத்து நடந்த உடனே ஹாஸ்பிடலில் சேர்ப்பதால், ஆண்டுக்கு 50,000 உயிர்களை காப்பாற்ற முடியும், இதனால் 7 நாள் சிகிச்சை செலவாக அரசு ஹாஸ்பிடலுக்கு ₹1.5 லட்சம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

News December 19, 2025

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்

image

பாகிஸ்தான் கபடி வீரர் உபயதுல்லா ராஜ்புத் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் நடந்த UnOfficial போட்டியில், அவர் இந்திய அணியின் ஜெர்ஸியில் விளையாடிய போட்டோக்கள் வைரலான நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஒரு தனியார் போட்டி என கூறி, உபயதுல்லா மன்னிப்பு கோரியுள்ளார்.

News December 19, 2025

குடியரசு தின சிறப்பு விருந்தினர்கள் இவர்கள் தான்

image

2026 குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக, ஐரோப்பிய கமிசன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தலைவர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

error: Content is protected !!