News November 15, 2024

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

image

கணினி நெட்வொர்க் மூலம் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை கிரிப்டோகரன்சி என அழைக்கின்றனர். பிட்காயின், எத்தரியம் உட்பட 4,000 வகையான Virtual Coins சந்தையில் இருக்கின்றன. இதனை டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது, பயன்படுத்த முடியும். பிற நாணயங்கள் போல Cryptocurrency-ஐ எந்த சர்வதேச அமைப்போ, அரசோ, வங்கியோ கட்டுப்படுத்துவதில்லை. இவற்றில் முதலீடு செய்வது அதிக அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

Similar News

News April 25, 2025

விவேக் இறப்புக்கு போகலையா? வடிவேலு ஓபன் டாக்

image

விவேக் இறப்புக்கு நான் போகவில்லையா? அவர் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவியிடம் துக்கம் விசாரித்ததாகவும், அவர் இறந்தபோது தானும் மிக மோசமாகத்தான் இருந்தேன் எனவும் விவேக் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து வடிவேலு கேங்கர்ஸ் பட ப்ரோமோஷன் நிகழ்வில் விளக்கம் அளித்துள்ளார். ராஜ்கிரண் உடனான உரசலுக்கும் விளக்கம் அளித்துள்ள வடிவேலு, கேப்டன் குறித்தான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா?

News April 25, 2025

KTK முன்னாள் அமைச்சர் ராமையா காலமானார்

image

கர்நாடக (KTK) காங்கிரஸ் EX அமைச்சரும், சிருங்கேரி தொகுதி EX MLAவுமான பெகனே ராமைய்யா (90) காலமானார். 1978-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா (ராகுலுடன் கை குலுக்குபவர்), ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் காலமானார். RIP.

News April 25, 2025

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

image

மார்ச் 2024-ல் ₹2 குறைந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரை ₹100.80, ₹92.39 என்றே தொடர்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $70-க்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், எரிபொருள்களின் விலை குறையாததற்கு இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரிப்பதும் காரணமாக உள்ள நிலையில், உள்நாட்டு வரிகள், கமிஷன்கள், தேவைகள் ஆகியவையும் காரணிகளாக உள்ளன. எப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறையுமோ?

error: Content is protected !!