News December 22, 2024

எது ஆணவம்? விஜய்யை விளாசிய கரு.பழனியப்பன்

image

200 தொகுதிகளில் வெல்வோம் என ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கட்சி தொடங்கிய உடனே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிடுவேன் எனக் கூறுவதுதான் ஆணவப்பேச்சு என்றார். நம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 9, 2025

SCIENCE: டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

image

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.

News September 9, 2025

BREAKING: நேபாள ஜனாதிபதி ராஜினாமா

image

நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2025

நேபாள் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977 – 9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!