News April 11, 2025
பாஜகவில் அண்ணாமலைக்கு இனி என்ன பதவி?

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயரை பரிந்துரைத்தோரில் அண்ணாமலையும் ஒருவராவார். இதனால் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் அண்ணாமலைக்கு தமிழக பாஜகவில் அடுத்து என்ன பதவி அளிக்கப்படும்? மாநிலங்களவை எம்பி ஆக்கப்படுவாரா? மத்திய அமைச்சர் ஆக்கப்படுவாரா? என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பாராட்டு

புதுச்சேரியில் இன்று பொதுகூட்டம் நடத்திய விஜய், அதற்கு பாதுகாப்பு அளித்த மாநில அரசையும், CM ரங்கசாமியையும் மீண்டும் பாராட்டியுள்ளார். மேலும் எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினர், கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள் எனவும் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம் அரசியல் பயணத்தை முடக்க திமுக போடும் திட்டம் அணுவளவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
#KovaiBiggestLandSCAM.. பின்னணி என்ன?

கோவையில் ₹3,500 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக சிங்காநல்லூர் அதிமுக MLA ஜெயராம் மீது புகார் எழுந்துள்ளது. ஜி-ஸ்கொயர் நிறுவனம் தனது இந்த புகாரை செய்தித்தாளில் பொது அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திமுக ஆதரவாளர்கள் பலரும் #Kovaibiggestlandscam என்ற ஹேஷ்டேக்கை X தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று அமைச்சர் <<18501393>>நேரு மீதான ED-ன்<<>> ஊழல் புகாரை அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.


