News July 8, 2025
Non Interlocking ரயில்வே கேட் என்றால் என்ன?

கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.
Similar News
News July 8, 2025
மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்ய திட்டம்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு பதிலாக டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News July 8, 2025
ரயில் விபத்தில் நுழைந்த மொழி பிரச்னை

கடலூர், செம்மங்குப்பம் விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தினால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் தமிழர்களுக்கு மத்திய அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மொழியும் உள்நுழைந்துள்ளது.
News July 8, 2025
சம்பளத்தில் 33% வரை EMI செலுத்தும் மக்கள்

நடுத்தர வர்க்கத்தினரின் மாத சம்பளத்தில் 33% வரை EMI செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுகிறதாம். இதனால் அடிப்படை தேவைகளான மளிகை, போக்குவரத்து, வாடகை ஆகியவற்றை சிரமப்பட்டு சிக்கனமாக செய்கின்றனராம். இதனால் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், சற்று அதிக வருமானம் பெறுபவர்களும் விதிவிலக்கின்றி 45% வரை லோன் செலுத்துகின்றனராம். இதற்கு விலையேற்றத்திற்கு ஏற்ற சம்பள உயர்வு இல்லாததும் காரணமாம்.