News April 18, 2025
ஸ்மார்ட் கார்ட் தொலைஞ்சிடுச்சா..?

திரும்ப பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ‣https://www.tnpds.gov.in/ பக்கத்தில் ‘பயனாளர் நுழைவு’ கிளிக் செய்யவும் ‣ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து, வரும் OTPயை பதிவிடுங்கள் ‣கார்டு டவுன்லோட் டேப் வரும் ‣அதில், ‘Smart card Print’ ஆப்ஷனை கிளிக் செய்து, மொழியை தேர்வு செய்யவும் ‣உங்களின் ஸ்மார்ட் கார்டை PDF வடிவத்தில் எளிதாக டவுன்லோட் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News November 22, 2025
காலையிலேயே பரபரப்பான சென்னை.. துப்பாக்கிச்சூடு

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தற்காப்புக்காக விஜயகுமாரை காலில் சுட்டுப்பிடித்த போலீசார், அவரின் கூட்டணியான கவுதம், நிரஞ்சன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
News November 22, 2025
திடீரென மனம் மாறிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் <<18203048>>மம்தானிக்கும்<<>>, டிரம்ப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, நியூயார்க் வளர்ச்சிக்கும் தேவையானவை செய்து தரப்படும் எனவும், மம்தானி சிறந்த மேயராக இருப்பார் எனவும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நேற்று வரை எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் இப்படி இணக்கம் காட்டுவது எப்படி என மக்கள் கேட்கின்றனர்.
News November 22, 2025
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.


