News April 17, 2025
சிவராஜ்குமார் பெண்ணாக பிறந்திருந்தால்?

சிறுவயதில் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துவிட்டு 3 நாள்கள் குளிக்காமல் இருந்ததாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கமலின் ஆரா மற்றும் ஸ்மெல் தன் மீது இருக்க வேண்டும் என நினைத்து அப்படி செய்ததாகவும், அந்த அளவிற்கு அவருடைய ரசிகன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை தான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக திருமணம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
முன்னாள் அமைச்சர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தனது வாழ்க்கையை பொது சேவை & இந்தியாவின் விளையாட்டு மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் சுரேஷ் கல்மாடி (81) என்று, இந்திய ஒலிம்பிக் சங்க Ex தலைவர் நரிந்தர் பத்ரா புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சுரேஷ் நேற்று காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பொதுமக்கள் உள்பட பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
News January 7, 2026
ஸ்டாலினுக்கு எதிராக போட்டி? விஜய்யின் முடிவு

2016 தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவர் JCD பிரபாகர். தற்போது தவெகவுக்கு தாவியிருக்கும் அவரிடம் மீண்டும் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தலில் போட்டியிடும் எண்ணத்துடன் தவெகவில் இணையவில்லை என்றார். அத்துடன், தலைமை (விஜய்) உத்தரவிட்டால் எந்த தொகுதியில் வேண்டும் என்றாலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா? SC கேள்வி

தெருநாய்கள் மேலாண்மை தொடர்பான வழக்குகளை SC விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், நாய்களின் உரிமைகள் குறித்து நாய் ஆர்வலர்கள் வாதிட்டபோது, மற்ற விலங்குகளின் நிலை என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா என்றும் காட்டமாக கேட்டனர். பள்ளிகள், ஹாஸ்பிடல்கள், கோர்ட்டுகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு உள்ளே தெருநாய்களை அகற்றுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


