News September 25, 2025
குளிக்காமல் இருந்தால் உடலுக்கு என்ன ஆகும்?

சோம்பேறித்தனத்தால் சிலர் குளிப்பதை தவிர்க்கின்றனர். இது உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா? *உடலில் 1,000 வகை பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும். *சருமத்தில் ஈரப்பதம் குறைந்து உப்பு திட்டு போல உருவாகும். *உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். *எனவே, உடலில் உருவாகும் கிருமிகளை அழிக்க தினமும் குளிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்க தினமும் குளிக்கும் பழக்கம் உடையவரா?
Similar News
News September 25, 2025
90 ஆண்டுகள் கழித்து சிக்கிய மர கங்காரு

உலகின் மிகவும் அரிதான பாலூட்டிகளில் ஒன்றான வோண்டிவோய் மர கங்காரு, நியூ கினியா தீவில் உள்ள வோண்டிவோய் தீபகற்பத்தின் தொலைதூர மலை காடுகளில் வாழ்கிறது. இது முதன்முதலாக 1928இல் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், இந்த இனம் அழிந்துவிட்டது என்று நம்பப்பட்ட நிலையில், 90 ஆண்டுகள் கழித்து 2018இல் மீண்டும் தென்பட்டது. மேலே இருக்கும் மர கங்காருவின் க்யூட்டான போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க.
News September 25, 2025
ஒரே மேடையில் விஜய், அஜித்

இன்று விஜய்யின் ‘குஷி’ படம் ரீரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், குஷி பட ஆடியோ லான்ச் விழாவில் அஜித்தும் விஜய்யும் ஒன்றாக கலந்துகொண்டது பற்றி தயாரிப்பாளர் AM ரத்னம் பகிர்ந்துள்ளார். ‘காதல் கோட்டை’ படத்தை தெலுங்கில் நான் ரீலீஸ் செய்ததால், அஜித்துடன் நல்ல பழக்கம் ஏற்படவே, தனது அழைப்பின் பேரில் குஷி பட விழாவில் கலந்துகொண்டதாக கூறியுள்ளார். மீண்டும் இருவரும் ஒன்றாக மேடையேறினால் எப்படி இருக்கும்?
News September 25, 2025
5-வது நாளாக தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் கலக்கம்

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்து 81,159 புள்ளிகளிலும், நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 24,890 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. ICICI, HDFC, Bajaj Finance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன. அதேநேரம் Axis Bank, Bajaj Auto, Hero உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்துள்ளன.