News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News January 20, 2026
உடல் எடையை குறைக்க யூடியூப் டிப்ஸ்.. மாணவி உயிரிழப்பு

மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து, உடல் எடையை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி நாட்டு மருந்து சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் 18-ம் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட, ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 20, தை 6 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 20, 2026
சாய்னா நேவால் ஓய்வு!

நீண்டகால முழங்கால் பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த சாய்னா நேவால், தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார். இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் போட்டியில் ஒரு போட்டி ஆட்டத்தில் விளையாடிய சாய்னா, ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தம் 24 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.


