News August 8, 2024
வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் நடக்குமா?

வங்கதேச கலவரம் போல இந்தியாவிலும் நடக்க வாய்ப்புள்ளது, என காங்கிரஸின் சல்மான் குர்ஷித் கூறியுள்ளதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை தாக்குகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள சகிப்புத்தன்மை மிக்க பெரும்பான்மையினர் ஒருபோதும் இப்படி செய்ய மாட்டார்கள். அதை பாஜக அரசும் அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 29, 2025
BCCI-ன் பணத்தாசையும் காரணம்: கவாஸ்கர்

சொந்த மண்ணில் இந்தியாவை SA ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இந்தியாவின் படுமோசமான தோல்விக்கு BCCI-ன் பணத்தாசையும் காரணம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அதேநேரம், ரோஹித், கோலி இருந்திருந்தால் மட்டும் இந்தியா வென்றிருக்குமா என்று கேள்வி எழுப்பிய கவாஸ்கர், NZ-க்கு எதிராகவும், பார்டட்-கவாஸ்கர் டிராபியிலும் அவர்கள் இருந்தபோது தான் இந்தியா தோல்வியை தழுவியது என்றும் சாடினார்.
News November 29, 2025
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

7 கிமீ., வேகத்தில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல், சென்னையில் இருந்து 450 கிமீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால், சென்னை, காஞ்சி, குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், காலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
பாலய்யாவுக்கு பதில் விஜய் சேதுபதியா?

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், இப்படத்தில் பாலய்யா கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாலய்யா படத்தில் இருந்து விலகியதாகவும், அந்த ரோலில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஷூட்டிங் 2026, பிப்ரவரியில் முடிவடைந்து, சம்மரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் வெயிட்டிங்?


