News November 20, 2024

மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

image

மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

Similar News

News November 20, 2024

Janmath: மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லை

image

பெரும்பாலான கருத்து கணிப்பு நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஜன்மத் நிறுவனம் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 130 முதல் 145 வரை தொகுதிகளும், காங். கூட்டணிக்கு 125 முதல் 140 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள்.

News November 20, 2024

PMARQ: ஜார்கண்டில் ஜேஎம்எம் கூட்டணி வெற்றி பெறும்

image

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு PMARQ நடத்திய EXIT POLLS விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 37 முதல் 47 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 31 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகள் 1 முதல் 6 தாெகுதிகளில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

முடிவுக்கு வருகிறதா சரத்பவார், உத்தவ் அரசியல்

image

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி மெஜாரிட்டி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், என்சிபி கட்சியின் தலைவர் சரத்பவாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அவருக்கு இப்போது 84 வயதாகிறது. அதேபோல, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT), இந்த தேர்தலில் வெல்லவில்லை எனில், சிவசேனா தொண்டர்கள் முழுமையாக ஷிண்டே பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.