News March 19, 2025
இன்னும் என்னென்ன செய்யப் போகுதோ AI!

AI-யின் வளர்ச்சி, ஒருபுறம் ஆச்சரியத்தை தந்தாலும் மறுபுறம் பயத்தையும் சேர்த்தே தருகிறது. அப்படியொரு சம்பவத்தைதான் AI தற்போது செய்திருக்கிறது. இத்தாலியின் பிரபலமான IL FOGILO நாளிதழின் ஒருநாள் செய்தித்தாளையே AI தயாரித்து கொடுத்துவிட்டது. இதைதான் அந்நிறுவனம் நேற்று விற்பனை செய்துள்ளது. ஹெட்லைன்ஸ், தலையங்கம், செய்திகள் என 100 ஜர்னலிஸ்டுகளின் வேலையை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது AI.
Similar News
News July 8, 2025
No Work, No Pay: ஊழியர்களுக்கு TN அரசு எச்சரிக்கை!

நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். ‘நோ ஒர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து <<16987412>>நாளை நாடு தழுவிய போராட்டம்<<>> அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
பாமக மேடையில் ராமதாஸின் மூத்த மகள்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் அவரது மூத்த மகள் காந்திமதி இருந்தது பேசுபொருளாகியுள்ளது. இவரது மகன் ப்ரீத்திவனே அன்புமணியின் மருமகன். இதனால் ப்ரீத்திவனுக்கு கட்சியில் கை ஓங்குவதாகத் தெரிந்தது. இதனாலேயே காந்திமதியின் மற்றொரு மகன் முகுந்தன் தாத்தா மூலம் கட்சியினுள் நுழைய முற்பட்டார். இதில்தான் அப்பா – மகன் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட மோதல் இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.
News July 8, 2025
பள்ளி வேன் விபத்து… விஜய் உருக்கமாக இரங்கல்

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.