News March 21, 2024
ஆளுநர் என்ன செய்கிறார்? உச்சநீதிமன்றம் கேள்வி

பொன்முடி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூற முடியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 16, 2026
BREAKING: இன்று கிடையாது.. தமிழக அரசு அறிவித்தது

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், அனைத்து மதுபானக் கடைகளில் சில்லறை விற்பனை, அதனுடன் இணைந்த பார்களில் விற்பனை நடைபெறாது. அதனை மீறி விற்பனை நடந்தாலோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 16, 2026
அண்ணாமலையை நீக்கியது அமித்ஷாவின் உத்தி: குருமூர்த்தி

கட்சி பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது பாஜகவும், அண்ணாமலையும் சேர்ந்து எடுத்த முடிவு என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், அமித்ஷா எடுத்த உத்திதான் அது என்றும், உத்திகளை தயார் செய்வதில் அமித்ஷா திறமைசாலி எனவும் குருமூர்த்தி கூறியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவை போல அமித்ஷா தற்போது TN-ஐ கையில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
இன்று இந்த விளக்கு ஏற்றுங்க.. செல்வ செழிப்பு பெருகும்!

மாட்டுப் பொங்கலில் பசு மாடு இல்லாதவர்கள், பஞ்ச காவிய விளக்கு ஏற்றும்படி ஆன்மீகவாதிகள் அறிவுறுத்துகின்றனர். பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதே பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வழிபாட்டால், செல்வ செழிப்பு பெருகுமாம். அதேபோல, எங்கேனும் பசுக்களை பார்த்தால், ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது 30 முக்கோடி தேவர்களின் அருளையும் பெற்றுத் தரும்.


