News January 31, 2025

பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? (1/2)

image

*FY26 ஜிடிபி வளர்ச்சி 6.3-6.8% இருக்கும் *அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன *சில்லறை பணவீக்கம் 5.4%-லிருந்து 4.9% ஆகக் குறைந்துள்ளது *வேலையில்லா பிரச்னை 3.2% ஆகக் குறைந்துள்ளது. *FY25-ன் முதல் 9 மாதங்களில் சேவைத் துறை ஏற்றுமதி 11.6% உயர்ந்துள்ளது. *சீரான நிதிநிலையால், பேரியல் பொருளாதாரம் வலுவாக உள்ளது. *பல்வேறு தடைகள் இருந்தும் தொழில்துறை 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது.

Similar News

News March 22, 2026

வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

image

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

News March 22, 2026

1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

image

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

News March 22, 2026

10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

image

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!