News April 4, 2025
சீனாக்காரன் என்ன பண்றான்? நாம என்ன பண்றோம்?

வேலையில்லாத இளைஞர்களை பணக்காரர்களின் டெலிவரி ஏஜெண்ட்களாக மாற்றுவதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேலையா என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகவும், இந்திய நிறுவனங்களும் எதிர்கால தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 4, 2025
சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்போரூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் (ஹரிதாஸ், லியோ டேனியல், சுகந்தி) உயிரிழந்ததற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
விரைவில் 5Gக்கு அப்டேட் ஆகும் BSNL

BSNL நிறுவனத்திற்கு ₹61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் BSNL விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்நிறுவனம் பெரும் வாடிக்கையாளர் இழப்பை சந்தித்தது. இருப்பினும், 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் BSNL ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என நம்பலாம்.
News April 4, 2025
பதிலுக்கு பதில் வரி… அப்படிப்போடு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் அதிரடியாக வரி விதித்திருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப். இதனால், உலக பொருளாதாரமே திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில், பதிலுக்கு பதில் சீனாவும் வரி விதித்துள்ளதால், மறைமுக வர்த்தகப் போர் தொடங்கியிருக்கிறது.