News March 27, 2024
தோனியிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்?

2024 ஐபிஎல் தொடர், இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ருதுராஜ் தலைமையிலான CSK அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள தோனிக்கு, இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை, நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி விலகுவார் என்றால், இத்தொடரில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? என கமெண்டில் சொல்லுங்க.
Similar News
News December 11, 2025
டிசம்பர் 11: வரலாற்றில் இன்று

*சர்வதேச மலை நாள். *1882 –கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்தநாள். *1931 – ஆன்மிகவாதி ஓஷோ பிறந்தநாள். *1935 – 13வது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாள். *1958 – நடிகர் ரகுவரன் பிறந்தநாள். *1969 – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 நிலாவில் தரையிறங்கியது. *1980 – நடிகர் ஆர்யா பிறந்தநாள். *2004 – பாடகி M.S. சுப்புலட்சுமி உயிரிழந்தநாள்.
News December 11, 2025
விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாக இது இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை இது முற்றிலும் தவிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
BCCI கூட்டத்தில் RO – KO குறித்து ஆலோசனை

ரோஹித், கோலியின் ஒப்பந்தங்களை திருத்துவது பற்றி வரும் 22-ம் தேதி நடைபெறும் BCCI பொதுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான சம்பளம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜடேஜா, பும்ராவுக்கு நிகராக சுப்மன் கில் A+ பிரிவில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வானதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.


