News August 22, 2025
மதுரை மாநாட்டில் விஜய் தவறவிட்டது என்ன?

திமுக, பாஜகவை விமர்சித்த விஜய், பல பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசாமல் விட்டது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நிகழும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக அவர் பேசாமல் விட்டது அரசியல் கணக்கு என ஒருசாரார் கூறினாலும், அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனர். இளைஞர் அஜித் மரணம், நெல்லை கவின் படுகொலை குறித்து அவர் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 5, 2026
SPORTS 360°: CSK அணியில் ஜேம்ஸ் ஃபோஸ்டர்

*மகளிர் ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் தோல்வி *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன், ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் சிராக் ஷெட்டி, ராங்கிரெட்டி இணை தோல்வி *CSK அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமிக்கப்படவுள்ளார் *பாகிஸ்தான் ODI அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம் *NZ ஓபன் ஸ்குவாஷில், இந்திய வீரர் சோட்ராணி உலகின் 6-ம் நிலை வீரரிடம் போராடி தோல்வி
News March 5, 2026
கத்தார் எரிவாயு உற்பத்தியை நிறுத்துகிறது

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவதாக கத்தார் அறிவித்துள்ளது. குறைந்தது ஒரு மாதத்திற்கு சூப்பர் கூல்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய LNG சப்ளையராக இருப்பதால், இந்த முடிவு நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
News March 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


