News March 26, 2025
சிறுபான்மை மக்களுக்கு திமுக என்ன செய்தது? அண்ணாமலை

சிறுபான்மை மக்களுக்காக தான் செய்ததை திமுகவால் கூற முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சிகளிலும் சிறுபான்மை தலைவர்கள் இருப்பதாகவும், திமுக மட்டுமே முஸ்லிம்களுக்கு நல்லது செய்வதை போல பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். இதுவரை பாஜக கூட்டணி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எந்த விதத்திலும் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 27, 2025
14 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவு

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் 14 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவடைந்துள்ளது. மகாதேவ் சூதாட்ட ஊழல் தொடர்பாக அவரின் இல்லத்தில் காலையில் தொடங்கிய சிபிஐ சோதனை இரவு வரை நடைபெற்றது. இதே வழக்கில் 16 நாட்களுக்கு முன் பாகேல் மற்றும் அவருடைய மகன் சைதன்யா வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News March 27, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1955 – ஈழத்துக் கவிஞர் முல்லையூரான் பிறந்த தினம்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1977 – அமெரிக்காவில் விமான விபத்தில் 583 பேர் உயிரிழந்தனர்.
2009 – இந்தோனேசியாவில் அணை உடைந்ததில் 99 பேர் பலியானார்கள்.
News March 27, 2025
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.