News April 26, 2025

தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

image

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?

Similar News

News October 22, 2025

கரூர் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழு

image

கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் CBI விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள IPS அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற Retd.நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில், TN கேடரை சேர்ந்த மூத்த IPS அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News October 22, 2025

பார்வையில் ஆளை சாய்க்கும் ஸ்ரீலீலா க்ளிக்ஸ்

image

ஸ்ரீலீலாவின் ஒரு நடனத்துக்கு தென் இந்தியாவில் இருந்து வட இந்தியா வரை காத்துக்கிடக்கிறது. அப்படி பெர்பார்மன்ஸில் பின்னி பெடலெடுக்கும் ஸ்ரீலீலா, இன்ஸ்டாவில் இளசுகளின் மனதை சுட்டி இழுக்கவும் தவறுவதில்லை. வாரத்திற்கு ஒரு போட்டோஷூட்டை பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளையடிக்கிறார். அப்படி நேற்று அவர் பகிர்ந்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.

News October 22, 2025

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பாஜக அழுத்தம்

image

பாஜகவின் அழுத்தத்தால் 3 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால், எதிர்க்கட்சி வேட்பாளர்களை பாஜக மிரட்டி வருவதாகவும், வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

error: Content is protected !!