News February 2, 2025
தோனி செய்ததை மறக்க முடியாது: சச்சின்

வாழ்க்கையில் பல கவனச் சிதறல்கள் வரும், ஆனால், அவை உங்கள் கிரிக்கெட்டை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என இளம் வீரர்களுக்கு சச்சின் அறிவுறுத்தியுள்ளார். புகையிலை, மதுபான நிறுவனங்கள் கான்ட்ராக்ட் அளிக்க முன் வந்ததால், 2 ஆண்டுகள் பேட் கான்ட்ராக்ட் இல்லாமல் விளையாடியதையும், தனது கடைசி 2011 WC போட்டியில், கேப்டன் தோனி தன்னை மரியாதை செய்த விதம் மறக்க முடியாதது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
Similar News
News March 5, 2026
விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2026 தேர்தல் பணிகளை CEC குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இறுதியாக, மேற்கு வங்கத்தில் மார்ச் 9 – 10-ல் நடைபெறுகிறது. இதனால் மார்ச் 10-க்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், குறிப்பாக மார்ச் 13-ல் தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 5, 2026
பாஜகவால் அதிமுக டெபாசிட் இழக்கும்: தா.மோ.அன்பரசன்

திமுக- காங்., கூட்டணியை அதிமுகவினரும், அதிமுக – பாஜக கூட்டணியை திமுகவினரும் மாறிமாறி விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில், அதிமுக தனியாக நின்றால், ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கும் என்றும், பாஜகவுடன் சேர்ந்ததால், பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலை வரும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது; ஆனால், மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார்.


