News April 3, 2025
அன்று CM மோடி சொன்னது

இன்றைய PM மோடி, 2012-ல் குஜராத் CM-மாக இருந்தபோது பேசியதை, இன்று CM ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், மத்திய- மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும், மத்திய-மாநில நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் அப்போது மோடி வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News September 17, 2025
தோனி தான் Greatest கேப்டன்: பொல்லார்டு

Greatest Captain of all-time ஆக தோனியை தேர்வு செய்துள்ளார், பொல்லார்டு. ஆனால், தான் அவரது தலைமையின் கீழ் விளையாடவில்லை என்றாலும், அவரது கிரிக்கெட் தந்திரங்களை கண்டு வியந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது விளையாட்டு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். MI-ல் பொல்லார்டு விளையாடியபோது, அவரது பந்துகளை தோனி சிதறவிட்ட மொமண்ட்டை இன்றும் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
News September 17, 2025
ATM-ல் பணம் சிக்கிவிட்டதா? இதை செய்யுங்கள்

ATM-ல் பணம் எடுக்கும்போது, சில நேரங்களில் பணம் சிக்கிக்கொள்ளும். அப்போது சிறிதுநேரம் காத்திருங்கள். ஆனால் பணம் வராமல், பணம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதாக SMS வந்தால், பரிவர்த்தனை சீட்டை பத்திரமாக வைத்திருங்கள். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளுங்கள். அப்போதும் சரிசெய்யப்படவில்லை என்றால், வங்கி கிளையை அணுகலாம். அப்படியும் கிடைக்கவில்லையென்றால் இழப்பீடு கோரலாம். ஷேர் பண்ணுங்க!
News September 17, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க!

தீபாவளி பரிசாக PM KISAN தவணைத் தொகை ₹2,000-ஐ அடுத்த மாதமே வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், 2019 பிப்.1-க்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் மற்றும் ஒரே குடும்பத்தில் பல பயனாளிகள் இருந்தால் வெரிஃபிகேஷன் முடியும் வரை அவர்களுக்கு பணம் கிடைக்காது. PM KISAN வலைத்தளம் (அ) செயலியில் ‘Know Your Status’ சென்று தங்கள் தகுதி நிலையை சரிபார்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. SHARE IT.