News September 24, 2025
எந்த பிரச்சனைக்கு என்ன சாப்பிடலாம்?

சில பொதுவான பிரச்னைகளுக்கு நமது அன்றாட உணவு மூலம் தீர்வு காணலாம். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நீண்ட நாள் நலமாக வாழ வழிவகை செய்கிறது. எந்த பிரச்சனைக்கு என்ன உட்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 24, 2025
BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

சென்னையில் TTV தினகரன், OPS-யை சந்திக்கவிருந்த <<17817923>>செங்கோட்டையன்<<>> கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. தலைமைக்கு கெடு விதித்த விவகாரத்தில் ஏற்கெனவே அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், அவர் டிடிவி, சசிகலா, OPS-யை சந்தித்தால், கட்சியிலிருந்து நீக்க EPS திட்டமிட்டதாக தெரிகிறது. அதை தவிர்க்கவே அவர் டிடிவியை இன்று சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
News September 24, 2025
எலான் மஸ்க் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது 5 குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை 1993 முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தனது உள்ளாடைகளை தவறான எண்ணத்தில் கையாண்டதாக வளர்ப்பு மகள் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று எரோல் மஸ்க் மறுத்துள்ளார். இதை வைத்து தன்னை மிரட்டி சில குடும்ப உறுப்பினர்கள் பணம் பறிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.