News March 18, 2025

அரசு என்ன செய்ய முடியும்? ரகுபதி

image

மதுவால் இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால், அதற்கு அரசு என்ன செய்ய முடியும் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், “அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு கிடையாது. TNஇல் கொண்டு வந்தால் புதுச்சேரிக்கு சென்று மது அருந்தும் சூழல் உருவாகும். டாஸ்மாக்கில் குடித்துவிட்டு யாராவது இறந்தார்கள் எனப் புகார் வந்ததா? சூழ்நிலையை பொறுத்து மதுக்கடைகள் குறைக்கப்படும்” என்றார்.

Similar News

News March 18, 2025

ரத்தத்தை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்…

image

*பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
*இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
*தர்ப்பைப் புல் கஷாயம் குடிக்கலாம்.
*அத்திப்பழம் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியடைந்து உடல் பலம் பெரும்.
*வெந்தயம், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை அடிக்கடி சாப்பிடலாம்.
*கீரை, முட்டை, சுண்டைக்காய், கிவி பழம், முழு தானியம் வெல்லம், ஈரல் ஆகியவை ரத்த சோகையை தடுத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.

News March 18, 2025

புதினிடம் வலியுறுத்திய PM மோடி

image

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினை, PM மோடி வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் டோபில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக PM மோடியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 18, 2025

மார்ச் 18: வரலாற்றில் இன்று!

image

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)

error: Content is protected !!