News March 20, 2025
இந்தியா மகிழ்ச்சியான நாடாக மாற என்ன செய்யலாம்?

<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?
Similar News
News March 21, 2025
அதிமுகவில் இருந்து டி.ஜெ., விலகலா? விளக்கம்

இபிஎஸ் வலது கையாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. அதில், இபிஎஸ் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; மீண்டும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்தால், மீண்டும் இணைவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2025
IPL: வெற்றியாளர்கள் இவர்கள்தான்.. வீரர்கள் கணிப்பு

IPL 2025ல் எந்த அணி வெற்றி பெறும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். * சேவாக்- LSG, * கில்கிறிஸ்ட்- PBKS, * ரோஹன் கவாஸ்கர்- RCB, * பொல்லாக்- MI/SRH * திவாரி- SRH * சைமன் டவுல்- PBKS * எம்பாங்வா- GT * ஹர்ஷா போக்லே, மைக்கேல் வாகன் – MI. எந்த அணி வெற்றி பெறும் என்று நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க.
News March 21, 2025
கடன் வாங்கியதில் திமுக சாதனை: இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் ₹4.53 லட்சம் கோடி பெற்றுள்ளது. ஆனால், அதிக கடன் வாங்கியதை மறைத்து சதவீத கணக்கு காட்டி தங்கம் தென்னரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் பட்ஜெட் பதிலுரையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்ததாக விமர்சித்த அவர், நிதி மேலாண்மை குழு அமைத்து கடன் வாங்கியது தான் திமுகவின் சாதனை என்று சாடினார்.