News April 17, 2024
அவர்கள் என்ன ஜோதிடர்களா..?

மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நேர்மையாக நடந்தால், பாஜக 180 தொகுதிகளில் கூட வெல்லாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவின் ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்ற இலக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், 400 இடங்களில் வெல்வோம் எனக் கூற அவர்கள் என்ன ஜோதிடர்களா? எனக் கேள்வி எழுப்பினார். இந்தத் தேர்தல் மக்கள் பிரச்னைகளை முன் வைத்த தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.
Similar News
News April 11, 2026
விஜய்யின் கடைசி படத்தில் இப்படியா? பூஜா எமோஷனல்

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வருத்தமாக உள்ளதாக, அப்பட நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழு கணக்கில்லா நேரம் உழைத்துள்ளதாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் கடைசி படத்தை தியேட்டரில் கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும். எனவே, திரைக்கு வரும்வரை காத்திருப்போம் என எமோஷனலாக கூறியுள்ளார்.
News April 11, 2026
‘கனிமொழி தனி கட்சி’.. அரசியல் பரபரப்பு

2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி தொடங்குவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஸ்டாலினும், மற்றொருபுறம் கனிமொழியும் அரசியல் களத்தில் நேரடியாக மோதினால், திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது எனக் கூறினார். முன்னதாக, மாநில அரசியலில் தடம் பதிக்க கனிமொழி விருப்பம் தெரிவித்து தேர்தலில் சீட் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News April 11, 2026
வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து தள்ளிய RCB வீரர்

அனுபவமிக்க பிளேயர்களுககே பயத்தை காட்டும் அளவுக்கு RR-ன் 15 வயது வீரர் சூர்யவன்ஷி விளையாடுகிறார். இந்நிலையில் அவரை பாராட்டிய RCB வீரர் புவனேஷ்வர் குமார், சூர்யவன்ஷி பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்கவில்லை; நேர்த்தியான ஷாட்களையே விளையாடுகிறார் என்றார். மேலும், 15 வயது சிறுவனாக இருந்தாலும் சூர்யவன்ஷி மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பதாகவும், பாராட்டுகளுக்கு அவர் தகுதியுடையவர் என்றும் கூறியுள்ளார்.


