News March 3, 2025
பயப்படுவதற்கு நாங்கள் என்ன அதிமுகவா? உதயநிதி

மத்திய அரசு மிரட்டினால் பயப்படுவதற்கு தாங்கள் ஒன்றும் அதிமுகவோ, இபிஎஸ்ஸோ கிடையாது என உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றால், மாநிலத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் எனவும், ஏற்கனவே ஹிந்தி திணிப்பால் பல மாநிலங்களில் தாய்மொழி அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், மத்திய அரசை கண்டித்து, இன்று முதல் தொகுதிதோறும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட உள்ளன.
Similar News
News March 30, 2026
குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

கன்னியாகுமரி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 30, 2026
எடப்பாடியில் EPS ஜெயிப்பாரா பார்ப்போம்: செங்கோட்டையன்

தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகதான் வெல்லும் என EPS கூறியதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி தொகுதியிலேயே EPS-ஆல் வெற்றிப்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் 9 முறை வெற்றிபெற்றதை மக்கள் தனக்கு அளித்த மாபெரும் கொடையாக கருதுவதாகவும் அவர் கூறினார்.<<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.


