News August 10, 2024
மத்திய கேபினட் செயலாளரின் பொறுப்புகள் என்ன?

இந்திய அரசில் குடியரசுத்தலைவர், பிரதமர் வரிசையில் 11ஆவது இடத்தில் இருப்பவர் மத்திய அமைச்சரவை செயலாளர். மத்திய அரசின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான இவர், பிரதமருக்கு நேரடி தகவல் தெரிவிப்பவராக இருப்பார். பிரதமருக்கும், மத்திய அமைச்சரவைக்கும் ஆலோசனைகள் வழங்கக்கூடியவர். மத்திய அமைச்சரவை செயலகத்தின் முதன்மை அதிகாரி. அரசுத்துறை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களை பணியமர்த்துவதில் பரிந்துரைகள் வழங்குபவர்.
Similar News
News November 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 19,கார்த்திகை 3 ▶கிழமை:புதன் ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 12.00 PM – 1.30 PM ▶எமகண்டம்: 7.30 AM – 9.00 AM ▶குளிகை: 10.30 AM – 12.00 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: ரேவதி
News November 19, 2025
தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள்: RTI தகவல்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது RTI-ல் கிடைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது. ரயில் மோதலை தவிர்க்கும் கவாச் அமைப்பு, 5084 கி.மீ தூரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய நிலையில், 1984 கி.மீ தூரத்திற்கு மட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் தெற்கு ரயில்வேயில் 492 ரயில் நிலையங்களில் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
மதிப்பு கூட்டும் மையங்கள்: 1.50 கோடி வரை மானியம்

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ₹1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து , வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்காக விண்ணப்பிங்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.


