News March 18, 2025

நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள் என்ன?

image

ஏழை எளிய மக்கள், விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடன் வைக்க <<15798931>>RBI<<>> விதித்துள்ள புதிய விதிமுறை, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் முழுப்பணமும் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதற்கு முன்பு, அடகு வைத்த நகைகளை ஆண்டு வட்டி மட்டும் கட்டி, அதே தினத்தில் அடகை நீட்டித்துக்கொள்ளலாம்.

Similar News

News March 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

News March 19, 2025

இன்றைய (மார்ச் 19) நல்ல நேரம்

image

▶மார்ச் – 19 ▶பங்குனி – 05 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 19, 2025

இதுதான் எனது ஒரே இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர்

image

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!