News July 6, 2025
2026-ல் திமுகவுக்கு இருக்கும் பாதகம்?

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என <<16963562>>திமுகவும்<<>>, ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் கங்கணம் கட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு அரசின் திட்டங்கள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை பாதகமாக இருக்கிறது. அதேபோல், 2021-ல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த மாத மாதம் மின் கணக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவைகளை நிறைவேற்றாதது பாதகமாக உள்ளன.
Similar News
News July 7, 2025
செம்மணி புதைகுழியில் 47 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

1994-ல் போரின்போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழர்கள் எலும்புகள், உடல் எச்சங்கள் யாழ்ப்பாணம்- அரியாலை – சிந்துப்பாத்தி பகுதிகளில் அகழாய்வுப் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில், செம்மணி புதைகுழியில் இதுவரை 47 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கல்லூரிகளில் இசை வெளியீடு: சசிகுமார் அதிருப்தி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பிரீடம்’. சத்யசிவா இயக்கிய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை பார்க்க அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News July 7, 2025
ராசி பலன்கள் (07.07.2025)

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – உயர்வு ➤ மிதுனம் – புகழ் ➤ கடகம் – அச்சம் ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – உயர்வு ➤ துலாம் – இரக்கம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – பகை ➤ மகரம் – போட்டி ➤ கும்பம் – நஷ்டம் ➤ மீனம் – கவலை.