News January 20, 2025
பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் கோரிக்கை என்ன?

எத்தனை லட்சம் கொடுத்தாலும் வேண்டாம், எங்களை விவசாயம் செய்ய விடுங்கள் என்பதே பரந்தூர் சுற்றுப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. சென்னையிலிருந்து 70 கி.மீ தூரத்தில் ₹29,000 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு பொடவூர், நல்வாய், தண்டலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 3,466 ஏக்கர் நன்செய் நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 5, 2026
IPL டாஸ்: ஹைதராபாத் அணி பேட்டிங்

SRH-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற LSG பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. SRH அணியில் ஹர்ஷல் படேல் மற்றும் லிவிஸ்டன் இணைந்துள்ளனர். அதேபோல், LSG அணியில் நோர்க்யாவுக்கு பதில் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை LSG அணி வெற்றி பெற்றுள்ளது.
News April 5, 2026
அந்த வேதனை இருக்கே வேதனை.. என்னன்னு பாருங்க

நம்மூரைத் தாண்டி வேறு சில ஊர்களில் சால்னாவுக்கு தனி காசு கேட்டாலே நமக்கு கோபம் வரும். இங்கோ ‘Chilly dusted gold fingers’ என்ற பெயரில், பெட்டிக்கடைகளில் விற்கும் குடல் அப்பளத்தை ஒருவர் ₹150 கொடுத்து வாங்கியுள்ளார். ‘என் வம்சத்தில் அப்பளத்தை ₹150 கொடுத்து வாங்கிய முதல் ஆள் நான்தான்’ என்றும் தனது வேதனையை அவர் SM-ல் கொட்டி தீர்த்துள்ளார். என்னவென்று நினைத்து இந்த பொருளை அவர் ஆர்டர் செய்திருப்பார்?
News April 5, 2026
விஜய் மனசுல பாஜக தான் இருக்கு: குஷ்பு

புதுச்சேரியில் தவெக வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளருக்கு <<19565066>>விஜய் வாய் தவறி<<>> வாக்கு கேட்டார். இந்த வீடியோ SM-ல் வைரலான நிலையில் பலரும் அவரை டிரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று தெரியாமல் தங்கள் கட்சி வேட்பாளர் பெயரை அவர் சொல்லியுள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மனதில் பாஜகதான் இருக்கு; அது மட்டும் உறுதி என்றும் கூறியுள்ளார்.


